
வண்டுகள் பூ இதழ்களை தேடிசெல்வது
பூக்களின் மேல் கொண்ட காதலால்!!
கடல் அலைகள் கரையை தொட்டு ரசிப்பதுகரையின் மீது கொண்ட காதலால் !!
மழைத்துளிகள் பூமியை கட்டி அணைப்பதுபூமியின் மீது கொண்ட காதலால் !!
பூங்காற்று புல்வெளியை தீண்டுவதுபுல்வெளி மீது கொண்ட காதலால் !!
கதிரவனின் கதிர்கள் தாமரையை மலரந்திடசெய்வதுதாமரையின் மீது கொண்ட காதலால் !!
பால்நிலவு இரவு பொழுதை அழகாக்குவதுஇரவின் மீது கொண்ட காதலால் !!
இத்தனை காதலர்களையும்அவர்களின் காதலையும்
படைத்த இறைவா
உன்னையும் நான் காதலிக்கின்றேன் என்றென்றும் !!





